பாலில் விஷம் கலந்திருக்கும் தாயின் வேஷத்தை அறிந்திராத பிஞ்சுக் குழந்தைகள்: வீட்டை பூட்டிவிட்டு காதலனோடு ஓடிய தாய்

இந்தியாவில், சென்னையை சேர்ந்த விஜயன் (30)-அபிராமி (25) ஆகியோருக்கு 7 வயதில் அஜய் என்ற மகனும், 4 வயதில் கார்னிகா என்ற மகளும் உள்ளனர்.

தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வரும் விஜயன், மாத கடைசில் என்பதால் நேற்று வீடு திரும்பவில்லை. இதனையடுத்து இன்று காலை வீடு திரும்பிய அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.வீட்டின் கதவை திறந்து கொண்டே உள்ளே பார்த்த போது, தன்னுடைய இரண்டு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

அத்தோடு, வீட்டில் மனைவி மாயமாகியிருப்பதையும் அறிந்த அவர், பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

மேலும், குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பதை வைத்தியர்கள் உறுதி செய்தனர்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார், விஜயனிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அபிராமிக்கு வேறு ஒரு நபருடன் தகாத உறவு இருந்து வந்ததால், கடந்த சில நாட்களாகவே இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக தெரிவித்தார்.இதில், மாதகடைசியில் கணவர் வீட்டுக்கு வர தாமதமாகும் என்பதால் இரண்டு குழந்தைகளுக்கும் பாலில் விஷம் கலந்துகொடுத்துவிட்டு கள்ளக்காதலனுடன் சென்றுள்ளார் என தெரியவந்தது.

இந்நிலையில், கள்ளக்காதலனை கைது செய்த பொலிஸார்,  தலைமறைவாகியிருந்த அபிராமியை நாகர்கோவிலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
Previous Post Next Post