யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற ரயிலில் ஏற்பட்ட கோளாறினை, அதே ரயிலில் பயணித்த மாணவன் ஒருவன் அதிரடியாக சீர் செய்துள்ளார்.
தொழில்நுட்ப கல்லூரி மாணவரான ஜனித் தீமந்த என்ற இளைஞனின் அபார திறமை குறித்து கொழும்பு ஊடகங்கள் பாராட்டி பேசியுள்ளன.
கடந்த 19ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணித்த ரயில் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இடை நடுவில் நின்ற ரயிலை குறித்த மாணவன் உடனடியாக சரி செய்து மீண்டும் பயணத்தை தொடர உதவியுள்ளார்.
மஹகல்கடவல பிரதேசத்தில் வைத்தே இந்த சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது. கோளாறு ஏற்பட்டு ரயில் நிறுத்தப்பட்ட இடம் ஒரு காட்டு பகுதி என தெரிவிக்கப்படுகின்றது. ரயிலில் பணி செய்த தொழில்நுட்ப பிரிவு நபரால் 45 நிமிடங்கள் முயற்சித்த போதிலும் ரயிலை மீண்டும் இயக்க முடியாமல் போயுள்ளது.
இந்த மாணவர் அதனை சீரமைப்பதற்கு தன்னார்வமாக முன்வந்துள்ளார். அதற்காக ரயில் அதிகாரிகள் மற்றும் பயணிகளும் உதவியுள்ளனர்.
20 நிமிடங்கள் என்ற சிறிய நேரத்திற்குள் குறித்த மாணவன் அதனை மீளவும் இயக்கி பயணிகளின் ரயில் பயணத்தை தொடர உதவியுள்ளார்.
மாணவனின் அபார திறமையினால் பயணிகளுக்கு ஏற்படவிருந்த அசௌகரியங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து பலரும் மாணவனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.