இலங்கையில் மண்வெட்டியால் அடித்து மனைவியை கொலை செய்த கணவன்

இலங்கையில் மண்வெட்டியால் தலையில் அடித்து மனைவியை கொலை செய்த கணவன் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் விரிவாக.,

நிலுகா சுபாஷினி தனது கல்வியை நிறுத்தி எதிர்காலத்திற்கான ஆயிரம் நம்பிக்கையுடன் ஆடைத் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றார்.

வேலைக்குச் சென்று வரும்போது ஜயசுந்தர பண்டாவுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக, அவரை நேசிக்கவும் இறுதியில் அவரை திருமணமும் செய்து கொண்டாள். விரைவில் அவர்களுக்கு அழகான மகனும் பிறந்தான்.

ஜயசுந்தர ஒரு பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் பணிபுரிந்தார். அதன்பின்னர் அவர் அந்த வேலையை விட்டுச் செல்ல வேண்டியிருந்தது. அதனையடுத்து, கூலி வேலைக்குச்சென்று தனது குடும்பத்தை பராமரித்து வந்தார் ஜயசுந்தர.

ஜயசுந்தரவுக்கு நிலுகா மீதிருந்த காதல் சந்தேகத்திற்கு வித்திட்டதுடன், இதன் காரணமாக இருவருக்கிடையில் மோதல் நீடித்தது.

நிலுகாவிற்கு கணவரின் தொல்லை அதிகமானதால் அவள் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் கடந்த 12ம் திகதி பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

அடுத்த நாள் அவர்கள் இருவரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆலோசனை மற்றும் அறிவுரை வழங்கி இருரையும் அனுப்பி விட்டார்.
தனது பிள்ளையுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற நிலுகா உறவினர்களின் வீட்டுக்குச்சென்று பல மணிநேரங்களின் பின்னரே தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்தநிலையில் அவள் வீட்டிற்கு வரும்போது ஜயசுந்தர ஏற்கனவே வீட்டில் இருந்துள்ளார்.

அந்தக்கணத்தில் நிலுகா கொலை செய்யப்பட்டார்.

மண்வெட்டியால் நிலுகாவின் தலையில் அடித்து கொலை செய்ததாக சந்தேக நபர் பொலிஸ் நிலையத்திற்கு சென்று தெரிவித்துள்ளார்.

“நான் நிலுகாவை கொன்றேன்…. நான் நிலுகாவை கொன்றேன்…” என சத்தம் போட்டு சென்றுள்ளார்.

அயலவர்கள் அவர்களின் விட்டுக்குச்சென்று பார்த்தவுடன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த நிலுகாவைப் பார்த்து அம்மா… அம்மா என கூப்பிட்டு அழுதுகொண்டிருந்துள்ளது அவர்களின் ஒன்றுமறியாத அந்தப் பச்சக்குழந்தை.

இது தொடர்பாக ஹிராந்துருகொட்டே பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவிக்கையில்,
“அன்று பிற்பகல் கழுத்தில் காயங்களுடன் இரத்தம் வழிந்தோட ஒரு நபர் பொலிஸ் நிலையத்திற்கு வந்தார். அவர் தனது மனைவியை படுகொலை செய்ததாக கூறினார்.

அவர் கழுத்தில் ஒரு சிறிய காயம் இருப்பதை நான் கவனித்தேன். பின்னர், அவரை பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் அனுப்பி வாக்குமூலத்தை பெறச்சொன்னேன். அதுவரைக்கும் குறித்த பெண் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதன்பிறகு நாங்கள் விரைந்து காயடைந்த பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.

ஆனால் கடுமையாக தாக்கப்பட்ட குறித்த பெண் ஏற்கனவே இறந்துவிட்டார். இது ஒரு மிருகத்தனமான கொலை.

குழந்தையுடன் கதிரையில் உட்கார்ந்திருக்கும்போது மண்வெட்டியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கதிரை இரத்தத்தால் நனைந்திருந்தது என குறிப்பிட்டார்.
அவர் நிலுகாவைப் பற்றி சில சந்தேகம் கொண்டதாக பொலிஸாரிடம் ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்” என கூறியுள்ளார்.

Previous Post Next Post