இது வேறெங்கும் இல்லை உங்கள் வவுனியாவே தான்..! அதிர்ச்சி தகவல்!

வவுனியா நகரசபையினரால் நகரத்திலிருந்து ஒரு மாதத்திற்கு 600 தொண் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. என்று தகவல் அறியும் சட்டத்தினூடாக கேட்கப்பட்ட தகவலுக்கு நகரசபையினால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

நகரத்திலிருந்து அகற்றப்பட்டு வரும் குப்பைகள் நகரிலிருந்து 10 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள பம்பைமடு பகுதியில் குப்பை மீள் சூழற்ச்சி செய்யப்படுவதற்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் கொட்டப்பட்டு வருகின்றன.

எனினும் அங்கு மீள் சுழற்சி செய்யப்படவில்லை.வவுனியா நகரிலிருந்து ஒரு நாளைக்கு 18 தொடக்கம் 20 தொண் வரையான குப்பைகள் உழவு இயந்திரம் கனரக வாகனங்களில் அகற்றப்பட்டு வருகின்றன.

எனினும் அகற்றப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்படுவதில்லை. அதேபோன்று ஒதுக்கப்பட்ட பகுதியில் ஒழுங்குமுறை பின்பற்றப்படவில்லை.சாரதிக்கு ஏற்றது போல தான் விரும்பிய இடங்களிலேயே குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.

இதனைச் சென்று பார்வையிடுவதற்கு அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை.அவ்வாறு நியமிக்கப்பட்டால் ஒழுங்கு முறை பின்பற்றி செயற்படுவதில்லை. சுகாதாரப்பரிசோதகர் இப்பகுதிக்குச் சென்று தனது கடமைகளை சரிவர மேற்கொள்வதில்லை. அதற்கான அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்படுவதில்லை.

இங்கு பாதுகாப்பு கடைமையிலுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர் தொடர்ந்து கடமையாற்றுவதில்லை. அங்கு கொட்டப்படும் குப்பைகள் எரிக்கப்படுவதால் சுவாச பிரச்சினைகள் ஏற்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.

இக்குப்பைகள் இரும்புகள் எடுக்க வருபவர்களினால் எரிக்கப்பட்டு வருகின்றன.கடந்த யூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து யூலை மாதம் முதலாம் திகதி வரையான ஒரு மாத காலப்பகுதியில் நகரசபையினால் 600 தொண் குப்பைகள் நகரிலிருந்து அகற்றப்பட்டு பம்பைமடுவில் கொட்டப்பட்டுள்ளது

இக்குப்பைகள் அனைத்தும் மீள் சூழற்சி மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறு மீள் சூழற்சி மேற்கொள்ளாமல் கொட்டப்படுவதால் நகரசபையினருக்கு கிடைக்கும் வருமானம் இன்றிச் செல்கின்றது.




இக்குப்பைகள் மீள் சுழற்சி மேற்கொள்வதால் பலருக்கு வேவைவாய்ப்புக்கள் கிடைக்கவும் வழிகள் ஏற்படுவதுடன் நகரசபைக்கு வருமானமும் அதிகரிக்க வாய்ப்புக்கள் காணப்படுகின்றன

இதேவேளை பிரதேச சபையின் குப்பைகளும் இப்பகுதியிலேயே கொட்டப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது








Previous Post Next Post