
இந்தியாவின் ஹைதராபாத் நகரில் காதலித்து கரம் பிடித்த கர்ப்பிணி மனைவியை அவர் குடும்பத்தார் கடத்தி வைத்துள்ளதாக கணவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
ராஜூ என்ற இளைஞரும், பூஜா (22) என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் தங்கள் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் தனது மனைவியை அவரின் சகோதரர் கடத்தி சென்று வைத்துள்ளதாக ராஜூ பொலிசில் புகார் அளித்துள்ளார்.
புகார் குறித்து ராஜூ கூறுகையில், நாங்கள் திருமணம் செய்து கொண்டது எங்கள் இரு குடும்பத்தாருக்கும் பிடிக்கவில்லை.
என் மனைவி பூஜா தற்போது நான்கு மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்த கர்ப்பத்தை கலைத்துவிட வேண்டும் என பூஜாவின் குடும்பத்தினர் எங்களை மிரட்டினார்கள்.
இந்நிலையில் பூஜாவின் சகோதரர் அடியாட்களுடன் வந்து என்னை அடித்துபோட்டு விட்டு பூஜாவை கடத்தி சென்றுவிட்டார்.
எனக்கு என் மனைவியும், அவர் வயிற்றில் உள்ள குழந்தையும் பத்திரமாக இருக்க வேண்டும், இதனால் பூஜாவை மீட்டு தர பொலிசாரை அணுகினேன் என கூறியுள்ளார்.
ராஜூவின் புகாரை பெற்ற பொலிசார் கூறுகையில், ராஜூவும், பூஜாவும் திருமணம் செய்தபின்னர் பூஜாவை காணவில்லை என அவர் குடும்பத்தார் புகார் கொடுத்தனர்.
இதைவைத்து பூஜாவிடம் விசாரிக்கவுள்ளோம், இதன்பின்னர் சட்டம் தன் கடமையை செய்யும் என கூறியுள்ளனர்.