நான் இப்போ சாகப்போறேன்! மரண வாக்குமூலத்தில் கதறிய இளைஞர்

திருச்சியை சேர்ந்த இளைஞர், தன்னுடைய காதலி ஏமாற்றிவிட்டதால் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருச்சியின் காரைப்பட்டியை சேர்ந்தவர் சசிகுமார், இவருக்கும் புதுக்கோட்டையை சேர்ந்த யுவராணி என்பவருக்கும் காதல் மலர்ந்தது.

கடந்த நான்கு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், யுவராணியின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்தனர், இதனால் சசிகுமார் யுவராணியின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக யுவராணி சரியாக பேசாமல் இருந்துள்ளார், அதேவேளை வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணமும் நிச்சயித்துவிட்டனர்.இதனால் மனமுடைந்து போன சசிகுமார், தற்கொலை செய்து கொண்டார்.

அதற்கு முன்பாக வாட்ஸ்அப்பில், ஒரு ஆண், ஒரு பெண்ணை மோசம் பண்ணியது தெரிந்தால் அவனுக்கே திருமணம் செய்து வைக்கின்றனர், ஆனால் ஆணை மோசம் செய்துவிட்டால் புகார் கூட எடுக்க மாட்டேங்கிறாங்க, அதனால் நான் சாகப்போகிறேன்.

இது என்னுடைய மரண வாக்குமூலம், இனி யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது, உண்மையாக இருந்தா மட்டும் லவ் பண்ணுங்க, காதலி துரோகம் செய்தால் காதலனுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என பேசிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Previous Post Next Post