அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புபடுத்தப்பட்டு கைதுசெய்யப்பட்ட இலங்கையர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்து அவுஸ்திரேலியாவில் அரசியல் தலைவர்களை கொலை செய்வது மற்றும் கேந்திர இடங்கள் மீது தாக்குதல் நடத்துவது உட்பட பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொள்ளும் குறிப்புக்களை தனது மடிப்புத்தகத்தில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த 25 வயது சிட்னி பல்கலைக்கழக பணியாளரான மொகமட் கமெர் நிஸாம்தீன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவரது மடிப்புத்தகத்தில் இரு இருந்த குறிப்புக்கள் பலவீனமானவை என்றும் அவரது வீட்டில் எந்த விதமான தீவிரவாத பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் பொது குற்றவியல் திணைக்கள பணிப்பாளர் சூ சியோய் தெரிவித்தார்.
அவரது மடிப்புத்தகத்தில் இருந்த குறிப்புக்களும் அவரது கையெழுத்துக்கும் தொடர்பு இல்லை பகுப்பாய்வுகளில் தெரியவந்தவுள்ளது. இந்த நிலையில் இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பலவீனம் அடைந்துள்ளதகாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிஸாம்தீன் இலங்கை அமைச்சரவை அமைச்சர் பைசல் முஸ்தபாவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.