தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் தங்கையைப் பெண் பார்க்க வந்த இளைஞரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வடக்குப்பட்டி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி (29). கடந்த 2012ம் ஆண்டு இவருடைய தங்கையைப் பெண் பார்ப்பதற்காக, சரவணன் (29) என்பவர் தனது குடும்பத்தினருடன் வந்தார்.
தங்கையின் கல்யாணத்தில் விருப்பம் இல்லாத ஜெயபாண்டி, தனது வீட்டிலேயே வைத்து சரவணனை கத்தியால் குத்தி கொலை செய்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் ஜெயபாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ஜெயபாண்டிக்கு ஒரு ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் தற்போது விதிக்கப்பட்டுள்ளது.