தாலி கட்டும் நேரத்தில், இந்தத் திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என மணமகள் மறுப்புத் தெரிவித்து திருமணத்தை நிறுத்திய சம்பவம் தஞ்சாவூரில் நடந்துள்ளது.
தஞ்சாவூர் வல்லம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த கலைத்தட்டு தட்டுகள் உற்பத்தி செய்யும் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நேற்று தஞ்சாவூர் மேலவீதி அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது.
இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையால் திருமண மண்டபம் களைகட்டியிருந்தது. மணக்கோலத்தில் மணவறையில் மணமகன் தயாராக அமர்ந்திருந்தார்.
ஆனால், தாலி கட்டும் நேரம் நெருங்கிய பிறகும் மணமகள் வரவில்லை. இந்தத் திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை எனவும் வேறொருவரை தான் காதலிப்பதாகவும் அந்தப் பெண் தெரிவித்திருக்கிறார்.
இதைக் கேட்டு மணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். மணமகள் குடும்பத்தினர்,
நீண்டநேரம் பேசிப் பார்த்தும்கூட, இந்தத் திருமணத்துக்கு அந்தப் பெண் சம்மதிக்கவில்லை. இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து காவல்துறையினர் இங்கு வந்து சமாதானம் செய்ய முயன்றுள்ளார்கள்.
தஞ்சாவூர் மேற்கு காவல்நிலையத்தில் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. திருமணத்துக்கு நாங்கள் செலவு செய்துள்ள 3 லட்சம் ரூபாயை மணமகள் வீட்டினர் தர வேண்டும் என மணமகன் வீட்டினர் கேட்டுள்ளார்கள்.
ரூ.2.25 லட்சம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டு, உடனடியாக ஒண்ணேகால் லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை மணமகள் வீட்டினர் கொடுத்துள்ளார்கள்.
மீதியை பிறகு, தருவதாகத் தெரிவித்துள்ளார்கள்.