உத்திரபிரதேச மாநிலத்தில் குடிபோதையில் பெற்ற மகளை, தந்தையே பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ள கொடூர சம்பவம் நடந்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் நொய்டா அருகே, 35 வயது தந்தை இரவு 1 மணியளவில் அதிகமான மது போதையில் தன்னுடைய 12 வயது மகளை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
இதனை பொறுக்க முடியாமல் சிறுமி சத்தமிட்டுள்ளார், ஆனால் உடல் அசதியினால் கூச்சல் சத்தம் கேட்காமல் ஆழ்ந்த உறக்கத்தில் தாய் இருந்துள்ளார்.
அடுத்த நாள் காலையில், மகளின் ஆடையில் ரத்தக்கறை இருப்பதை பார்த்த தாய், சிறுமியிடம் நடந்தவை பற்றி கேட்டறிந்துள்ளார்.
இரவு நடந்த துயர சம்பவம் குறித்து விளக்கிய சிறுமி, நடந்தவை பற்றி வெளியில் கூறினால் 4 பேரையும் கொன்று விடுவேன் என தந்தை மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் விரைந்து வந்த பொலிஸார், சிறுமியின் தந்தையை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாய் கூறுகையில், நானும் என்னுடைய கணவரும் ஒரே இடத்தில் தான் வேலை செய்கிறோம். அவர் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் தான் வேலைக்கு வருவார். இருவரின் வேலை நேரங்களும் வேறு.
அன்றைய தினம் நாங்கள் நான்கு பேருமே ஒரே அறையில் தான் உறங்கி கொண்டிருந்தோம். நான் அதிகமான அசதியில் இருந்ததால், என்னுடைய மகள் சத்தமிட்டதை கேட்கவில்லை என தெரிவித்துள்ளார்.