மனைவியை தாக்க முயன்றவரை கொலை செய்த கணவன்!

மாத்தறையில் மனைவியின் கழுத்தை நெரித்த நபரை, கணவன் கோடரியால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நபர் ஒருவர் வீட்டிற்கு சென்று மனைவியின் கழுத்தை நெரித்து, கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதனை கண்ட கணவன், குறித்த நபரை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளார்.


 நேற்று மாலை தெனியாய அம்பஹாஹேன பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் தெனியாய பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கொலை குற்றச்சாட்டில் அதே பகுதியை சேர்ந்த 43 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Previous Post Next Post