வவுனியாவில் திருடப்பட்ட நகைகளுடன் பெண் கைது!!

வவுனியாவில் 15 பவுண்திருட்டு நகைகளுடன் பெண் ஒருவரை வவுனியா குற்றதடுப்புபொலிசார் கைதுசெய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா பண்டாரிகுளம் பகுதியில் கடந்த 24 ம் திகதி வீட்டொன்றிலிருந்து 15 பவுண் நகைகள் திருடப்பட்டன. இது தொடர்பாக குறித்த வீட்டுரிமையாளர் வவுனியா குற்றதடுப்பு பொலிசாரிடம் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளனர்.

அதன்பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா குற்றதடுப்பு உபபொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து உக்குளாங்குளம் பகுதியில் வைத்து பெண் ஒருவரை கைதுசெய்ததுடன் அவரிடமிருந்து 15 பவுண் நகைகளையும் மீட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர் இன்றையதினம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு (02.10) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post