வரதட்சணை கொடுமையால் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட பெண், காதலுடன் வாழ்ந்து உயிருடன் இருப்பதாக முகநூல் காட்டிக் கொடுத்துள்ளது.
உத்திரப்பிரதேசம் மாநிலம், பாராபங்கி மாவட்டம், ஃபைஸாபாத் பகுதியைச் சேர்ந்தவர் ரூபி. கடந்த ஜூன் மாதம் இவருக்கும் ராகுல் என்பவருக்கும் திருமணம் நடந்தது.
தனது மகளை வரதட்சணை கொடுமை செய்து கொல்லப்பட்டதாக ரூபியன் தந்தை, ராகுல் மீது முறைப்பாடு செய்தார்.
நீதிமன்றம் ரூபி கொலை செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணை செய்ய உத்தரவிட்டது.இதையடுத்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அப்பெண்ணின் முகநூல் பக்கமானது தொடர்ந்து இயக்கத்தில் இருந்தது தெரியவந்தது.
எனவே அவரது செல்போன் பயன்பாடு குறித்து 2 மாதங்களாக கண்காணித்து வந்தனர். இதில் அவர் உயிருடன் டெல்லியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து உத்தரப்பிரதேச பொலிஸார் டெல்லி சென்று ரூபியை கையும் களவுமாக பிடித்தனர்.
அப்பெண் ராமு என்பவரைத் திருமணம் செய்து கொள்ளவே கொல்லப்பட்டது போல நாடகமாடியது தெரியவந்தது. இதைதொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.