பத்து வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த இளைஞன்!

திருகோணமலை – கந்தளாய், ஜயந்திபுர பகுதியில் பத்து வயது சிறுவனொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபரை இம்மாதம் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க உத்தரவிட்டுள்ளார்.

ஜயந்திகம பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இன்று இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் பத்து வயதுடைய சிறுவனை வீட்டுக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.


 இது குறித்து அந்த சிறுவன், பெற்றோர்களிடம் தெரிவித்ததையடுத்து பெற்றோர்கள் சுரியபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டுக்கமைய குறித்த இளைஞரை பொலிஸார் கைது செய்து கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இதன் போதே விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்
Previous Post Next Post