கிளிநொச்சியில் ஐந்து பிள்ளைகளின் தாய்க்கு ஏற்பட்ட நிலை! குழப்பத்தில் குடும்பத்தினர்


கிளிநொச்சி இராமநானத் கமம் மருதநகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் காணமல் போயுள்ளதாக குறித்த பெண்ணின் கணவர் நேற்று கிளிநாச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

 46 வயதான ஐந்து பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கடந்த 13 ஆம் திகதி வீட்டிலிருந்து சுகவீனம் காரணமாக வைத்தியசாலைக்கு சென்றுதிரும்புவதாக தெரிவித்து சென்ற குறித்த குடும்ப பெண் வீடு திரும்பவில்லை என கணவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த பெண்ணை தமது உறனர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடிய போதிலும் இன்றுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என குறித் பெண்ணின் கணவர் தெரிவி்கின்றார்.

காணாமல் போன பெண் மருதநகர் பகுதியை சேர்ந்த மஞ்சுளா என அழைக்கப்படும் நாகராசா முனியம்மா என்ற குடும்ப பெண் என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

இவர் தொடர்பான தகவல்கள் கிடைக்குமிடத்து அவரின் கணவரான இராசதுரை நாகராசா என்பவரை 0776753485 எனும் தொலைபேசி இலக்கதுடன் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண் தொடர்பான தவல்கள் கிடைக்குமிடத்து தந்துதவுமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு தொடர்பில் கிளிநாச்சி பொலிஸாரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது. 
Previous Post Next Post