
தமிழகத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவியின் காதலன் கைது செய்யப்பட்டு, வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள அக்க நாயக்கன்பட்டியை சேர்ந்த தம்பதி உதயகுமார்(29)-மாஷாதேவி. இவர்களுக்கு கனிஷ்கா என்ற 4 வயது மகளும் 2 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.
உதயகுமார் அங்கிருக்கும் பஸ்நிறுத்தம் அருகே கோழிக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மாஷாதேவி கணவனை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இதையடுத்து கடந்த 13-ஆம் திகதி உதயகுமார் தன்னுடைய கடையை அடைத்துவிட்டு இரவில் கடை அருகில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதில், உதயகுமாருக்கும், மாஷா தேவிக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது.
இருவரின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த போது, மாஷா தேவியின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது மாஷாதேவிக்கு அக்க நாயக்கன்பட்டியை சேர்ந்த வாலிபருக்கும் தொடர்பு இருந்துள்ளது.
இது உதயகுமாருக்கு தெரியவந்ததால், அவர் கண்டித்துள்ளார். இதன் காரணமாகவே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதில் மனவேதனை அடைந்த உதயகுமார் அந்த வாலிபரை கொலை செய்யும் முடிவுக்கு வந்தார்.
இதை தெரிந்து கொண்ட மாஷா தேவி தனது கள்ளக்காதலனிடம் விவரத்தை கூறியுள்ளார். இதையடுத்து கள்ளக்காதலன் உதயகுமாரை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
மாஷாதேவியின் கள்ளக்காதலனின் பெயர் ரஞ்சித்குமார் (28). அவர் மின்சார வாரியத்தில் டவர் அமைக்கும் பணியில் சப் காண்டிராக்டராக பணியாற்றி வந்த நிலையில், அவரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது ரஞ்சித்குமார் அளித்த வாக்குமூலத்தில், எனக்கும் மாஷா தேவிக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. இது உதயகுமாருக்கு தெரியவந்ததும் அவர் என்னை கண்டித்தார்.
இதைத்தொடர்ந்து மாஷா தேவி தனது தாய் வீடான மந்திதோப்புக்கு வந்து விட்டார். எனினும் உதயகுமார் என்னை தொடர்ந்து கண்டித்து வந்தார்.
மேலும் அவர் என்னை கொலை செய்ய திட்ட மிட்டதும் தெரியவந்தது. எனவே அவர் என்னை கொலை செய்வதற்கு முன்பு நான் முந்தி கொண்டு அவரை கொலை செய்ய முடிவு செய்தேன்.
நேற்று முன்தினம் கடை முன்பு படுத்து தூங்கி கொண்டிருந்த உதயகுமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்தேன். ஆனால் பொலிசார் கொலை செய்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.