
காணாமல் போயிருந்த நிலையில் திருகோணமலை நகர கடலில் சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளரின் இறுதி ஊர்வலம் வவுனியா கற்குளத்தில் இன்று நடைபெற்றது.
இறுதி ஊர்வலத்தில், கிராமப் பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கவனவீர்ப்பும் இடம்பெற்றது.
இதில் வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி லிங்கநாதன் , முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் , திருகோணமலை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் , ஊழியர்கள், மாணவர்கள் , தமிழ் விருட்சம் அமைப்பினர் , வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் , அரச, அரசார்பற்ற உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.