யாழ். வடமராட்சியில் கோர விபத்து!


யாழ். வடமராட்சி, பருத்தித்துறை பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மினி பேருந்தும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.கற்கோவளம், புனித நகரைச் சேர்ந்த ஜீவன்ராஜ் என்ற இளைஞரே இவ்வாறு விபத்தில் சிக்குண்டு படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், விபத்தின்போது படுகாயமடைந்த இளைஞன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous Post Next Post