வெளிநாட்டில் சாதனை படைத்து இலங்கைக்கு கிரீடம் கொண்டு வந்த பெண்!!

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற The Miss British Empire 2018 போட்டியில் இலங்கைகயை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட பெண் கிரீடத்தை வென்றுள்ளார்.

வைத்தியர் நுவன்திகா சிறிவர்தன என்பவரே இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

அவர் நவகமுவ பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலையில் வைத்திய பயிற்சிகளை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

இந்த போட்டியில் பங்கு பற்றியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனினும் எப்படியோ வெற்றி பெற்றுள்ளேன். பலர் எனக்கு உதவி செய்தார்கள். பல சுற்று போட்டிகள் இடம்பெற்றது. இலங்கைக்கு வெளியே வந்து இவ்வாறான கிரீடத்தை இலங்கைக்கு கொண்டு செல்ல கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியாக உள்ளது.

உண்மையாகவே அந்த நேரத்தை நினைத்து பார்க்க முடியவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் நான் கண்ணீர் விட்டு அழுதேன்.

எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என வெற்றி பெற்ற நுவன்திகா குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post