கணவன் வெளிநாட்டில்! இலங்கையில் மாயமான தாய் - மகன் - பொது மக்களின் உதவி கோரும் பொலிஸார்

மட்டக்களப்பு - புன்னச்சோலை கிராமத்தில் பெண்ணொருவரும், அவரின் மகனும் காணாமல் போயுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டள்ளது.



இவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் முதல் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குறித்த முறைப்பாட்டில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தர்ஷன் ஜோதிமலர் என்ற பெண்ணும், தர்ஷன் நிக்ஸன் என்ற நான்கு வயது மகனுமே காணாமல்போயுள்ளனர்.

காணாமல்போன பெண்ணின் கணவர் மத்திய கிழக்கு நாட்டில் தொழில் செய்து வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.



இந்த நிலையில் காணாமல்போனவர்களை மட்டக்களப்பு பொலிஸார் தேடி வரும் நிலையில், இவர்கள் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் 065 222 44 23 என்ற மட்டக்களப்பு பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களை கோரியுள்ளனர்.
Previous Post Next Post