மூன்று குழந்தைகளை கொலை செய்த தாய்: பின்னர் செய்த திடுக்கிடும் செயல்


தமிழகத்தின் சேலத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக 3 குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொழிஞ்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் (37) - ஜெயா (26) தம்பதிக்கு சுமித்தாஸ்ரீ (7), ஷாலினி (3) ஆகிய மகள்களும், 11 மாதத்தில் வெற்றிவேல் என்ற மகனும் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெயா மற்றும் அவரது குழந்தைகள் வெளியில் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த லட்சுமணன் இது குறித்து பொலிசில் புகார் அளித்தார்.

இதன்பேரில் விசாரணையை தொடங்கிய பொலிசார் ஜெயா மற்றும் குழந்தைகளை தேடிய நிலையில் அங்குள்ள கிணற்றில் ஜெயா, சுமித்தாஸ்ரீ, ஷாலினி, வெற்றிவேல் ஆகிய நால்வரும் சடலமாக மிதப்பதை கண்டுப்பிடித்து சடலங்களை மீட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக ஜெயா, 3 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

தற்கொலை செய்து கொண்ட ஜெயாவிற்கு வேறு ஒருவருடன் பழக்கம் இருந்து வந்ததாகவும், அவர் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்த லட்சுமணன், தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் விரக்தியடைந்த ஜெயா, தனது 3 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Previous Post Next Post