விரக்தியில் தனது குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட தந்தை

வேலூர் மாவட்டத்தில் தந்தை ஒருவர் விரக்தியால் தனது குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேல்மொனூர் ஈஸ்வரன் கோவிலை சேர்ந்த டைலர் வெங்கடேசனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு நடைபெற்று வந்துள்ளது.

இதனால் விரக்தியில் இருந்த வெங்கடேசன், தனது மகள்கள் மேகலா மற்றும் திவ்யா ஆகிய இருவரையும் கழுத்தில் தூக்குமாட்டி கொன்று விட்டு, தானும் தூக்கில் தொங்கியுள்ளார்.

இதுதொடர்பாக விரிஞசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous Post Next Post