தேனிலவுக்காக இலங்கை வந்து கண்ணீர் விட்டழுத பிரித்தானிய பெண்!!

தேனிலவிற்காக இலங்கை வந்த பிரித்தானியாவின் பிரபல மாடல் கண்ணீர் விட்டழுத சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் பிரபல மாடல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியான Olivia Buckland மற்றும் Alex Bowen இலங்கை தீவில் தேனிலவை கொண்டாடுவதற்காக வந்துள்ளனர்.

அண்மையில் திருமண பந்தத்தில் இணைந்த இந்த தம்பதி, தேனிலவிற்கு இலங்கை வந்து பல இடங்களை சுற்றி பார்த்துள்ளனர்.

இலங்கையில் உள்ள ஆமைகள் பாதுகாப்பு சரணாலயம் ஒன்றுக்கு இந்த தம்பதியினர் சென்றுள்ளனர்.

அங்கு புதிதாக பிறந்த ஆமைகளை பார்த்த Olivia, உணர்ச்சி வசப்பட்டுள்ளார். அத்துடன் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

தேனிலவுக்கு வந்த இடத்தில் அவர் உணர்ச்சிவசப்பட்டு அழுத செய்தி பிரித்தானிய ஊடகங்களின் தலைப்பு செய்தியாகியுள்ளது.

இதனை அவரது கணவர் வீடியோவாக பதிவிட்டுள்ளார். Olivia இதனை தனது இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.Previous Post Next Post