எறி­பந்­தாட்ட இறு­தி­யில் யூனி­யன் – பாலிக வித்தியாலயம்!!

பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தேசிய ரீதி­யி­லான எறி­பந்­தாட்­டத்­தில் தெல்­லிப்­பழை யூனி­யன் கல்­லூரி அணியை எதிர்த்து கொழும்பு ஸ்ரீமாவோ பாலிக மகா வித்­தி­யா­ல­யம் இன்று மோத­வுள்­ளது.

இரத்­தி­ன­புரி எமி­லிப்­பிட்­டிய அரச தலை­வர் கல்­லூரி மைதா­னத்­தில் இந்­தத் தொடர் நடை­பெற்று வரு­கின்­றது. நேற்று நடை­பெற்ற 20 வய­துப்­பி­ரிவு பெண்­க­ளிற்­கான அரை­யி­று­தி­யாட்­ட­மொன்­றில் தெல்­லிப்­பழை யூனி­யன் கல்­லூரி அணியை எதிர்த்து கேகாலை சென். ஜோசப் கல்­லூரி அணி மோதி­யது.

முத­லா­வது செற்­றில் ஆதிக்­கம் செலுத்­திய தெல்­லிப்­பழை யூனி­யன் கல்­லூரி அணி 25:16 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் அந்த செற்­றைக் கைப்­பற்­றி­யது. இரண்­டா­வது செற்­றும் 26:24 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் யூனி­ய­னின் வச­மா­னதை அடுத்து 2:0 என்ற நேர்­செற் கணக்­கில் வெற்­றி­பெற்று இறு­தி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றது தெல்­லிப்­பழை யூனி­யன்.

பிறி­தொரு அரை­யி­றுதி ஆட்­டத்­தில் கொழும்பு ஸ்ரீமாவோ பாலிக மகா வித்­தி­யா­லய அணியை எதிர்த்து வெல்­ல­வாய குமா­ர­தாஸ மத்­திய கல்­லூரி அணி மோதி­யது. இதில் கொழும்பு ஸ்ரீமாவோ பாலிக மகா வித்­தி­யா­லய அணி 3:1 என்ற செற் கணக்­கில் வெற்­றி­பெற்று இறு­தி­யாட்­டத்­திற்­குத் தகுதி பெற்­றது.







Previous Post Next Post