ஐரோப்பா ஆசைக்காக இலங்கை பெண் ஒருவர் செய்த அதிர்ச்சி காரியம்..!

இத்தாலியில் தொழில் வாய்ப்பினை பெற்று தருவதாக கூறி இலங்கை இளைஞர் ஒருவரை பெண் ஒருவர் திருமணம் செய்துள்ளார்.

தொடர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்ட பெண் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.



அம்பலந்தொடை பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் தொடர்பில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பெண்ணை திருமணம் செய்துள்ள இஞைர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் குறித்த இளைஞரை திருமணம் செய்து அவரது பணத்தினை மோசடி செய்து தலைமறைவாகியுள்ளார்.

குறித்த பெண் தங்கொடுவ பிரதேசத்தினை சேர்ந்தவர் என இளைஞர் தெரிவித்துள்ளார்.

தன்னுடன் திருமணம் ஆவதற்கு முன்னர் மற்றும் ஓர் நபரை திருமணம் செய்து இரு குழந்தைகள் உள்ளதாக பின்னர் தான் தனக்கு தெரியவந்ததாக இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post