திருமண மண்டபத்தை விட்டு பாய்ந்தடித்து ஓடிய மணமகன்…..!!

சற்று முன்னர் திருமண மண்டபம் ஒன்றில் மணமகளின் முதல் காதலன் திடீரென்று பிரசன்னமானதால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் மாத்தளை மாவட்டம் தம்புள்ளை பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது;

தம்புள்ளை நகரப் பகுதியிலுள்ள திருமண மண்டபம் ஒன்றில் இன்றைய தினம் சிங்கள முறையிலான கல்யாணம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்துள்ளது.இதன்போது அங்கு பிரசன்னமான இளைஞர் ஒருவர் கல்யாணத்தைக் குழப்பும் விதமாக நடந்துகொண்டுள்ளார்.

குறித்த கல்யாணத்தின் மணமகள் தனது முன்னாள் காதலி என கோசமிட்டதுடன் அவருடன் சேர்ந்தெடுத்த புகைப்படங்களையும் காண்பித்துள்ளார். அத்துடன் திடீரென்று பாய்ந்து சென்று மணமகனையும் தாக்கியுள்ளார்.

இதனையடுத்து அந்த மண்டபத்தில் கடும் பதற்ற நிலை உருவானதுடன், மணமகன் உடனடியாக தனது உறவினர்களுடன் குறித்த மண்டபத்தை விட்டு வெளியேறியுள்ளார்.எவ்வாறாயினும் குழப்பம் விளைவித்த குறித்த இளைஞர் பெண் வீட்டாரினால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post Next Post