நள்ளிரவில் வீட்டிலுள்ளவர்களை அச்சுறுத்திய நபர் : பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!!

மாத்தறை மாவட்டத்தில் திக்வெல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றிற்குள் நுழைந்து வீட்டிலுள்ளவர்களை அச்சுறுத்திய நபரொருவரை கண்டறிவதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் கடந்த 19ம் திகதி நள்ளிரவு வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைய முயற்சித்துள்ளார்.

இந்த நிலையில் இரண்டு பேர் குறித்த இடத்திற்கு வந்தபோது சந்தேக நபர் அவ்விடத்திலிருந்து வெளியேறும் காட்சி அங்கிருந்த சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

வீட்டின் உரிமையாளர் அயலவர்கள் மற்றும் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சந்தேக நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்படுககிறது.

இந்த நபரை அறிந்திருந்தால் தகவல் தெரிவிக்குமாறு திக்வெல்ல பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Previous Post Next Post