கருக்கலைப்பு செய்ததில் பலியான கர்ப்பிணி பெண்! பிரேத பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி


தமிழ்நாட்டின் மதுரையில் அடுத்தும் பெண் குழந்தை பிறந்துவிடும் என்ற அச்சத்தில் கருக்கலைப்பு செய்த போது உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் ஆண் குழந்தை இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

உத்தப்புரம் கிராமத்தைச் சேர்ந்த ராமன் - ராமுத்தாய் தம்பதி 3 பெண் குழந்தைகள் உள்ளனர், இந்நிலையில் ராமுத்தாய் 4-ம் முறையாக கருவுற்றார்.

7 மாதங்கள் ஆன நிலையில் மருத்துவமனை ராமுத்தாய் பரிசோதனைக்கு சென்றார். 4வதும் பெண் குழந்தையாகப் பிறந்தால் என்ன செய்வது என மருத்துவர்களிடம் கேட்டுள்ளார் ராமுத்தாய்.

7 மாதங்கள் ஆன நிலையில் இனி ஒன்றும் செய்ய முடியாது என்றும், முறையாகப் குழந்தை பெற்றுக் கொள்வதே வழி என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

அதே மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஜோதிலட்சுமி, ராமுத்தாயை அணுகி, 3 குழந்தைகளும் பெண்ணாகப் பிறந்துள்ளதால், 4வதும் பெண்ணாகத் தான் பிறக்கும் என்று கூறி, கருவைக் கலைக்க தான் உதவுவதாகத் தெரிவித்துள்ளார். அதற்கு 20 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்று கூறியுள்ளார்.

ஜோதிலட்சுமி, ராமுத்தாயை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததுள்ளார். அப்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு ராமுத்தாய் உயிரிழந்தார், இதையடுத்து பொலிசார் ஜோதிலட்சுமியை கைது செய்தனர்.

ராமுத்தாயின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போது அவர் வயிற்றில் ஆண் சிசு இருந்ததாக தெரியவந்துள்ளது.

பெண் குழந்தைக்கு பயந்து ராமுத்தாய் உயிரைவிட்ட நிலையில் அவர் வயிற்றில் ஆண் சிசு இருந்தது குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Previous Post Next Post