விஸ்வாசம் படக்குழுவுக்கு அதிர்ச்சி!!


படப்பிடிப்பின் படங்கள் வெளியானதால், அஜித் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வாசம் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

எப்போதுமே பெரிய நடிகர்கள் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புப் புகைப்படங்கள் வெளியாகாதவாறு படக்குழுவினர் பார்த்துக் கொள்வார்கள். படப்பிடிப்புத் தளத்தில் யாரையுமே புகைப்படம் எடுக்காதவாறு பார்த்துக் கொள்வார்கள். ஆனால், அதையும் மீறி எப்படியாவது சில புகைப்படங்கள் வெளியாகிவிடும்.



தற்போது, விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு படங்கள் வெளியாகியுள்ளன. இதில் அஜித், வில்லன்களோடு சண்டையிடும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் படக்குழு, கடும் அதிர்ச்சியடைந்துள்ளது.

அஜித் இரு வேடங்களில் நடித்து வரும் இந்தப் படத்தில், ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


அடுத்த ஆண்டு பொங்கல் நாளில், படம் வெளியிடப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்ககப்பட்டுள்ளது.

Previous Post Next Post