கனடாவில் இருந்து வீடியோ அழைப்பில் காத்திருந்த கணவன்! யாழில் மனைவி செய்த அதிர்ச்சி செயல்

கணவன் சந்தேகப்பட்டதால் யாழ்ப்பாணத்தில் உள்ள இளம்பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

இந்த சம்பவத்தினால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் பருத்தித்துறையை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கும், கனடாவை சேர்ந்த 34 வயது இளைஞனுக்கும் கடந்த மாதம் திருமணம் நடைப்பெற்றுள்ளது.

இந்தியாவில் வைத்து திருமணம் இந்த திருமணம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் சில நாட்களுக்கு பின்னர் குறித்த இளைஞன் கனடாவுக்கு சென்றுள்ளார்.

பெண் யாழ்ப்பாணத்துக்கும் சென்றுள்ளார். இதன் பின்னர் குறித்த இளைஞனுக்கு, மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் தொலைபேசியில் அடிக்கடி வாய்த்தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் வீட்டில் உள்ள அறையொன்றில் வீடியோ அழைப்பில் கணவன் காத்திருக்க அவர் முன்னிலையில் தூக்கில் தொங்கி மனைவி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனடியாக சத்தம் கேட்டு ஓடிவந்த தாய் உட்பட்ட உறவினர்கள் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post Next Post