உல்லாசமாக இருந்தாங்க... அதுதான் அப்படி செய்தேன்: மனைவியின் தலையை துண்டாக்கிய கணவனின் வாக்குமூலம்

மனைவியின் தலையை துண்டாக வெட்டி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்ற கணவன் அதற்காக காரணம் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தின் Tarikere தாலுகாவின் Shivani பகுதியைச் சேர்ந்தவர் Satish (35). இவருக்கும் Roopa (28) என்ற பெண்ணிற்கும் கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.இந்நிலையில் சதீஷ் கடந்த ஞாயிற்றுக் கிழமை கூர்மையான ஆயுதம் கொண்டு, மனைவியின் தலையை துண்டாக வெட்டியுள்ளார்.

அதன் பின் அதை ஒரு துணிப்பையில் வைத்துக் கொண்டு அருகில் இருக்கும் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்று சரணடைந்துள்ளார்.
இந்நிலையில், மனைவியை கொலை செய்தது குறித்து காவல் நிலையத்தில் கணவர் அளித்துள்ள வாக்குமூலம் பின்வருமாறு, எங்களது திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருந்தது. கடந்த இரண்டு வருடமாகத்தான் அவளது போக்கில் சந்தேகம் வந்தது.

நாளடைவில் தான் எனக்கு தெரிந்தது சுனில் என்ற ஒரு இளைஞருடன் அவளுக்கு பழக்கம் இருந்தது. இதனை கேள்விப்பட்ட நான் ரூபாவை கண்டித்ததோடு, அவள் மீது பாசத்தையும் காட்டினேன்.

இருப்பினும் அவர்களுடனான தொடர்பு நீண்டது. நான் கேட்டதாக கூறி சிலரிடம் மூன்று லட்சம் பணம் ஏற்பாடு செய்து, அதனை அந்த இளைஞனுக்கு கொடுக்கக் கூட ஏற்பாடு செய்திருக்கிறாள். இதனையும் கேள்விப்பட்ட நான், ரூபாவை கண்டித்தேன்.

இந்த நிலையில்தான் ஞாயிற்றுக்கிழமை காலை பெங்களூரு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினேன். அப்போது வீட்டில் மனைவி ரூபா அந்த இளைஞருடன் தனிமையில் இருப்பதை பார்த்தேன். என்னால் ஆத்திரம் தாங்க முடியவில்லை. இருவரையும் தாக்கினேன். இதில் அந்த இளைஞன் தப்பி ஓடிவிட்டான்.
ஆனால், ஆத்திரம் தீராத நான், ரூபாவைக் கொலை செய்து, அவளின் தலையைத் துண்டாக வெட்டி எடுத்து, சாக்கு பையில் போட்டு எடுத்து வந்தேன். இருசக்கர வாகனத்தில் 20 கிலோ மீட்டர் வந்திருக்கிறேன்.

அவர்கள் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்தேன் சார். தாங்க முடியாமல் அதுதான் தலையை சீவிட்டேன். எனக்கு என்னென்னா அவன் ஓடிட்டான், அதான் வருத்தமே என வாக்குமூலம் அளித்துள்ளார்.
சிக்மங்களூரு மாவட்ட நீதிமன்றத்தில் சதீஸை பொலிசார் ஆஜர்படுத்திய நிலையில், அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Previous Post Next Post