சற்றுமுன் வவுனியா உக்கிளாங்குளத்தில் இளைஞன் பரிதாபமாக பலி

சற்றுமுன் வவுனியா உக்கிளாங்குளத்தில் இளைஞன் பரிதாபமாக பலி

வவுனியா உக்கிளாங்குளத்தை சேர்ந்த 29வயதுடைய நிதர்சன் என்ற இளைஞன் ஒருவர் இன்று(12.09.2018) காலை அவரது வீட்டு கிணற்றை மின் இயந்திரம் மூலம் துளையிட்டு கொண்டிருந்த வேளை எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் குறித்த இளைஞன் பாதிப்படைந்த நிலையில் உடனடியாக வவுனியா பொதுவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.





பரிசோதித்த வைத்தியர் ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக அறிவித்துள்ளனர்

தற்சமயம் மரண விசாரணைக்காக சடலம் வவுனியா பொதுவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
கடந்த சில காலமாக வவுனியாவில் பல அவல சாவுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



Previous Post Next Post