குருநாகலில் மகனை வெட்டி கொலை செய்த தந்தை!

குருணாகல் மாவட்டம் கிரிபாவ – சந்தகல – யாய பாஹா பிரதேசத்தில் தந்தையொருவர் தனது மகனை மண் வெட்டியில் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ள நிலையில், சம்பவத்தில் 27 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார். 

மதுபோதையில் தனது தந்தையுடன் இறந்தநபர் தகராறு செய்துள்ளார். அப்போது தந்தை மகனை மண் வெட்டியால் தாக்கியுள்ளார்.
சம்பவத்தின் பின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய தந்தை பிரதேசத்தில் இருந்து தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சந்தேகநபரை கைது செய்ய கிரிபாவ பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
Previous Post Next Post