பிரதம நீதியரசர் மற்றும் நீதி அமைச்சர் இன்று கிளிநொச்சிக்கு வருகை தந்திருந்த நிலையில், அவர்கள் முன்னிலையில் முதியவர் ஒருவர் இலஞ்சத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

கிளிநொச்சியில் பொலிஸார் ஒருவர் இலஞ்சம் பெறுவதாகக் குற்றஞ்சாட்டி முதியவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய நீதி மன்றக் கட்டடத் தொகுதிக்காக அடிக்கல் நடும் நிகழ்வுக்காக வருகை தந்திருந்த பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
இதன் போது மேடையில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசிரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், நீதிபதிகள் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ் மா அதிபர், ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
அத் தருணத்தில் மேடைக்கு நேர் எதிராக ஏ9 பிராதான வீதியின் ஓரமாக காணப்பட்ட பூவரசு மரத்தில் இருந்து முதியவர் கையில் ஒரு பதாகையை வைத்துக்கொண்டு உரத்த குரலில் சத்திமிட்டுக் கொண்டிருந்தார்.
உடனடியாக விரைந்த பொலிஸார் முதியவருடன் பேசி அவரை மரத்தில் இருந்து கீழே இறக்கினர். அவரை சமரசம் செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.