சினிமாவை மிஞ்சிய செயல்களில் ஈடுபட்ட காதல் ஜோடி! கைது செய்த பொலிஸ்


டெல்லியை சேர்ந்த ஒரு காதல் ஜோடியினர் சினிமாவையே மிஞ்சிய அளவிற்கு, மிகவும் தெளிவாக பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியின் Govindpuri பகுதியில் நீண்ட நாட்களாகவே பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்த பொலிஸார், விக்கி (24), சோனியா (20) என்ற ஜோடிகளை கைது செய்தனர். போதை பொருளுக்கு அடிமையாகியிருந்த விக்கி, 8-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு, திருட்டு வேளைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளான்.

அவனுடைய மனைவி சோனியா, 7-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு விக்கியை கரம்பிடித்துள்ளார். இருவரும் சேர்ந்து சினிமாவையே மிஞ்சும் அளவிற்கு, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருக்கின்றனர். இவர்கள் திருட செல்லும்போது சோனியா முகத்தில் துணியை கட்டிக்கொள்வார். விக்கி தலையில் தலைக்கவசத்தை அணிந்து கொள்வார்.

அதேசமயம் இவர்கள் சென்று வரும் இருசக்கர வாகனத்தின் எண்ணை கண்டுபிடிக்க கூடாது என்பதற்காக, வேறு ஏதாவது ஒரு எண் பொரித்த பதாகையை பதித்து விடுவார்கள்.

இந்த நிலையில் இருவரையும் கைது செய்த பொலிஸார், இவர்கள் மீது 9 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post