ரத்தம் சொட்ட சொட்ட வெட்டிக் கொல்லப்பட்ட கொள்ளையன்: பட்டப்பகலில் பயங்கரம்

சென்னை மதுரவாயல் அருகே, வானகரம் மீன் சந்தையில் கொள்ளையன் ஒருவனை ரத்தம் சொட்ட வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரவாயல் அடுத்த வானகரம், மீன் சந்தை அருகே இளைஞர் ஒருவர் பலத்த வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார் கொலை செய்யப்பட்டு கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து நடந்த விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் விருகம்பாக்கம், காந்தி நகரை சேர்ந்த மணிகண்டன் (எ) புறாமணி(21) என்பதும், இவர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வழிப்பறி, செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் நிலுவலையில் உள்ளதும் தெரியவந்தது.மேலும் நேற்று இரவு தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக கூறி விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதையடுத்து சம்பவம் நடந்த இடத்தில் நண்பர்களுடன் உட்கார்ந்து மது அருந்தி உள்ளார்.

அப்போது ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக மணியை மர்மநபர்கள் ஓட, ஓட விரட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு எந்த திருட்டு வழக்கிலும் ஈடுபடமாட்டேன் என்று கூறி மணி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் எழுதி கொடுத்து விட்டு வந்துள்ளார்.

அதன் பிறகு கோடம்பாக்கத்தில் நடந்த குற்ற சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க மணி உதவியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக கொலை நடந்ததா? அல்லது வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Previous Post Next Post