திடீரென தாழிறங்கிய கொழும்பின் முக்கிய பகுதி!! (படங்கள்)

கொழும்பில் நாடாளுமன்றத்துக்கு செல்லும் பாதையில் நிலம் தரையிறங்கியமையால் பாரிய குழியொன்று ஏற்பட்டுள்ளது.

டென்சில் கொப்பேகடுவ மாவத்தையின் நடைபாதையில் இன்று அதிகாலை பாரிய குழியொன்று ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக மின்சார கம்பங்கள் மற்றும் சில மரங்கள் பல அடிகள் கீழே சென்றுள்ளன.

சேதமடைந்த மின்சார கம்பங்களை மாற்றும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது

Previous Post Next Post