செங்கலடியில் ஹுசைன் வாத்தியின் அட்டகாசம் – அப்பாவி மாணவனின் வாக்குமூலம்(காணொளி)

கணிதபாட புத்தகத்தை பாடசாலைக்கு கொண்டுவர காரணத்தினால் குறித்த மாணவனை ஆசிரியர் கண்முடி தனமாக தாக்கியுள்ளதாக மாணவன் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.மேலும் இதுகுறித்த வீடியோ சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கலடி மத்தியகல்லூரியில் கணித ஆசிரியராக கடமைபுரியும் ஏறாவூரை சேர்ந்த உஸைன் எனும் கணிதபாட ஆசிரியர் செங்கலடியைச்சேர்ந்த பத்தாம் தரத்தில் படிக்கும் மாணவன் ஒருவரை நெற்றியில் பலகையால் தாக்கியுள்ளார் கணிதபாட புத்தகம் பாடசாலைக்கு கொண்டுசெல்லாமையினாலே இவ்வாறு கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியர் பலகையால் தாக்கியதால் மாணவனிற்கு நெற்றியில் எட்டு தையல் போடப்பட்டு தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது முகநூல் போராளிகளிற்கு தகவல் கிடைத்துள்ளது.மாணவர்கள் இடும் தவறுகளை தண்டிப்பதை நாம் ஏற்கவேண்டும் ஆனால் இவ்வாறான கண்மூடித்தனமான தாக்குதல்களை ஒருபோதும் ஏற்க முடியாது.எனவே இத்தகு ஆசிரியரிற்கு விசாரணை இடம்பெற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலயக்கல்வி பணிப்பாளர், மற்றும் சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு எதிரான அதிகாரிகளது கவனத்துக்கு கொண்டுவருகின்றோம்.


Previous Post Next Post