காதல் ஜோடியை விரட்டியடித்த காவலாளி ஏற்பட்ட பரிதாபம்! யாழில் சம்பவம்


யாழ்ப்பாணம், நல்லூரில் உள்ள மந்திரிமனைக்குள் நின்ற காதல் ஜோடியை விரட்டியடித்த காவலாளி மீது இளைஞர் குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

நல்லூர் மந்திரிமனைக்குள் கடந்த வாரம் இளைஞன் ஒருவரும், இளம் பெண் ஒருவரும் இருந்துள்ளனர்.

இதன்போது குறித்த இளைஞன் இளம் பெண் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதனை அவதானித்த காவலாளி அவர்கள் இருவரையும் அங்கிருந்து வெளியேறுமாறு கோரியிருந்தார்.

இந்நிலையில் நேற்றுமுன் தினம் மதியம் 3 பேர் கொண்ட இளைஞர் குழு கம்பிகள், தடிகள் சகிதம் மோட்டார் சைக்கிளில் வந்திறங்கி மந்திரிமனை காவலாளியை அழைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் வயதான காவலாளி படுகாயமடைந்துள்ளார்.

இதனை அவதானித்த அயலவர்கள் உடனடியாக வயோதிப காவலாளியை மீட்டு பொலிஸ் நிலையத்தில் சேர்ப்பித்தனர்.




பொலிஸார் வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர் அவரை யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்

.மேலும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Previous Post Next Post