உடலில் காயங்களுடன் தூக்கில் தொங்கிய சிறுமி! கதறி அழும் பெற்றோர்தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் தற்கொலை செய்துகொண்ட 12 வயது சிறுமியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறி இரண்டாவது நாளாக உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சேர்ந்தவர்கள் ராஜா - ஜெயா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவருடைய இரண்டாவது மகள் ராகவி, அப்பகுதில் அருகே உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக வீட்டில் பெற்றோர் யாரும் இல்லாத போது, ராகவி சடலமாக தூக்கில் தொங்கியுள்ளார். இதனை கேள்விப்பட்டு பதறியடித்து ஓடிவந்த ஜெயா மகளை கட்டியணைத்தவாறே அழுது கொண்டு பொலிஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், ராகவியின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை முடிந்தும் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்த்தில் ஈடுபட ஆரம்பித்தனர்.

இறந்த ராகவியின் காலப்பகுதியில் காயங்கள் இருந்ததாகவும், வீட்டை அடிக்கடி ஒரு நபர் சுற்றி திருந்ததாகவும் கூறியுள்ளனர்.

மேலும் தற்கொலை என பதியப்பட்டுள்ள வழக்கினை, கொலை என மாற்றுமாறு கோரிக்கை விடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரண்டாவது நாளாகவும் போராட்டம் தொடர்ந்து வந்த நிலையில் தேனி ஏ.டி.எஸ்.பி., சுருளிராஜ், பழனிகுமார் தலைமையில் பொலிஸார் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றுவிட்டனர்.

இந்த சம்பவத்தில் தற்போது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Previous Post Next Post