வவுனியாவில் பொலிஸார் விரட்டியதில் ஏற்பட்ட விபத்தில் இளைஞன் கவலைக்கிடம்

வவுனியாவில் போக்குவரத்து பொலிசாரால் விரட்டிச் செல்லப்பட்ட மோட்டர் சைக்கிள் மின்சார கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதுடன் ஒருவர் சிறு காயங்களுகுள்ளாகியுள்ளார் படுகாயமடைந்த இருவரில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்இச்சம்பவம் பற்றி மேலும் அறியவருவதாவது

 இன்று இரவு 9.30 மணியளவில் வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதி, இறம்பைக்குளம் சந்தியில் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகர் பகுதியில் இருந்து பிளசர் ரக மோட்டர் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளனர். குறித்த மோட்டர் சைக்கிளை நகரப் பகுதியில் போக்குவரத்து கடமையில் நின்ற போக்குவரத்து பொலிசார் இருவர் குறித்த மோட்டர் சைக்கிளை மறித்துள்ளனர். இதன்போது குறித்த இளைஞர்கள் மோட்டர் சைக்கிளை நிறுத்தாது தப்பியோடிய போது போக்குவரத்து பொலிசார் அவர்களை தமது மோட்டர் சைக்கிளில் விரட்டிச் சென்றுள்ளனர்.

இதன்போது ஹொரவப்பொத்தானை வீதி வழியாக தமது மோட்டர் சைக்கிளை நிறுத்தாது செனற இளைஞர்களை பொலிசார் நெருங்கிய வேளை இறம்பைக்குளம் பாடசாலை அருகில் உள்ள சந்தியில் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகினர்.

இதன்போது மோட்டர் சைக்கிளில் சென்ற மூன்று இளைஞர்களில் சுஜித லக்மல் வயது 18 என்ற இளைஞன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார் ஏனைய 20வயதுடைய சபான் என்ற இளைஞன் படுகாயமடைந்துள்ளார் ஏனைய நபர் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.மூவரும் கூமாங்குளம் பகுதியை சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறது
இதேவேளை, விபத்து இடம்பெற்ற குறித்த பகுதிக்கு வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி, போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிசார் பலரும் வருகை தந்து விபத்து இடம்பெற்ற பகுதியை பார்வையிட்டதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர்.
Previous Post Next Post