பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட பொலிசார்! கமெராவில் சிக்கிய அதிர்ச்சி காட்சி

கேரளாவில் பொலிசார் ஒருவர் பள்ளி மாணவிகளிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

கேரளாவின் கொச்சியிலுள்ள எலம்காரா பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். 56 வயதான இவர் டிராபிக் பொலிசாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தேவரா பகுதியிலுள்ள லூர்து மாதா சர்ச் முன்பாக ரோந்து பணியில் ஈடுப்பட்டு வந்துள்ளார். அப்போது அங்கு போகும், வரும் பெண்களிடம் இவர் மிகவும் மோசமாக நடந்துள்ளார்.

இந்த காட்சி காவலருக்கு பின்னால் இருக்கும் கடையின் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது. அதில், நடந்து செல்லும் பள்ளி மாணவிகளிடம் ஒன்றும் தெரியாததது போல், தன்னுடையை கையை வைத்து கண்ட இடங்களில் இடிக்கிறார்.

வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்.....

அதுபார்ப்பதற்கே மிகவும் அருவருப்பாக உள்ளது. இந்த காட்சியை கேரளமக்கள் வேகமாக இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இந்த வீடியோ வெளியான உடனே இவரை பணியில் இருந்து இடைநீக்க செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் மீது போக்சோ சட்டத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Previous Post Next Post