இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் மீது தாக்குதல்! பலர் கைது

திருகோணமலையிலிருந்து கல்முனை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தாக்குதல் சம்பவம் இன்று காலை மட்டக்களப்பு – செங்கலடியில் வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்களை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பலரை தேடி வருவதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை மட்டக்களப்பு – பதுளை வீதி, பெரிய புல்லுமலையில் அமைக்கப்பட்டு வருகின்ற போத்தல் குடிநீர் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post