வாழ்க்கையை முடித்து கொண்ட இளம்பெண்: தந்தை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்தமிழ்நாட்டின் நெல்லையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் அவர் சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

ராஜமஞ்சு (27) என்ற பெண்ணுக்கும் முத்துகிருஷ்ணன் (31) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக கணவன் -மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் சம்பவத்தன்று ராஜமஞ்சு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து பொலிசுக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சடலத்தை அவர்கள் கைப்பற்றினார்கள்.

இதனிடையில் ராஜமஞ்சுவின் தந்தை தங்கராஜா மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

ராஜமஞ்சுவை அவரது கணவர் மற்றும் உறவினர்கள் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதால் தான் தற்கொலை செய்தார் என அவர்கள் கூறினார்கள்.

இது குறித்து தங்கராஜா மனு அளித்த நிலையில், இது சம்மந்தமாக தீவிரமாக விசாரிக்கப்படும் என பொலிசார் கூறியதால் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

Previous Post Next Post