பிர­பா­கரன் கொல்­லப்­பட்­டதன் மூலம் எதிர்­கால சந்­ததி காப்பாற்றப்­பட்­டுள்­ளது: தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக போரை நடத்­த­வில்லை ; புது­டில்லி கூட்­டத்தில் மஹிந்த

இரா­ணுவ நட­வ­டிக்கை முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­கரன் கொல்­லப்­பட்­டதன் மூலம் எதிர்­கால சந்­ததி காப்­பாற்­றப்­பட்­டுள்­ளது.

நாம் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக போரை நடத்­த­வில்லை. விடு­தலைப் புலி­களின் தீவி­ரவா­தத்­துக்கு எதி­ரான போரையே நடத்­தினோம் என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­துள்ளார்.



புது­டெல்­லியில் நேற்று முன்­தினம் சுப்­ர­ம­ணியன் சுவா­மியின் ஏற்­பாட்டில், விராட் ஹிந்­துஸ்தான் சங்­கத்­தினால் நடத்­தப்­பட்ட ‘இந்­திய – இலங்கை உற­வுகள்- முன்­நோக்­கிய பாதை’ என்ற கருத்­த­ரங்கில் உரை­யாற்­றிய போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­றிய அவர்

“போரில் வெற்றி பெற்ற இலங்கை படை­யினர் மீது அனைத்­து­லக சமூ­கத்­தினால், சுமத்­தப்­படும் மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுகள் பொய்­யா­னவை.

நாங்கள் எந்த நேரத்­திலும், ஒரு இன­வாத போரை நடத்­த­வில்லை. எமது இரா­ணுவ நட­வ­டிக்கை நிச்­ச­ய­மாக, தமிழ் சமூ­கத்­துக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

அது விடு­தலைப் புலி­களின் தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ரான போரா­கவே அமைந்­தி­ருந்­தது.




இரா­ணுவ நட­வ­டிக்கை முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்டு தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­கரன் கொல்­லப்­பட்­டமை மூலம் எதிர்­கால சந்­ததி காப்­பாற்­றப்­பட்­டுள்­ளது.

புலி­களின் செயற்­பா­டுகள் இலங்­கைக்குள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­தல்ல, இந்­திய மண்ணிலும் நீண்­டி­ருந்­தது.

இங்கு அவர்கள் ராஜீவ் காந்தி உட்­பட மற்றும் பலரை படு­கொலை செய்­தனர் என்­பதை மறந்து விடக் கூடாது.

தீவி­ர­வா­தத்தை ஒழிப்­பது ஒரு சமூ­கத்தின் நன்­மைக்­கா­கவோ அல்­லது ஒரு நாட்டின் நன்­மைக்­கா­னதோ மாத்­திரம் அல்ல.

இலங்கைப் படை­யினர் போரின் இறு­திக்­கட்­டத்தில், சிறி­ய­தொரு பகு­திக்குள் சிக்­கி­யி­ருந்த 3 இலட்சம் மக்­களை பாது­காப்­பாக மீட்­டனர்.

போரில் 40 ஆயிரம் பொது­மக்கள் கொல்­லப்­பட்­டனர் என்­பது மிகை­யான குற்­றச்­சாட்டு ஆகும். இது தவ­றான, மலி­னத்­த­ன­மான பரப்­பு­ரை­யாகும்.




தீவி­ர­வா­தி­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக, 8000 பேருக்கு மேல் இழப்­புகள் ஏற்­ப­ட­வில்லை. போர் இறு­திக்­கட்­டத்தை எட்­டி­யி­ருந்த போது பிரித்­தா­னிய வெளி­வி­வ­காரச் செய­லரும், பிரான்ஸ் வெளி­வி­வ­கார அமைச்­சரும், போர் நிறுத்தம் செய்­யு­மாறு அழைப்பு விடுத்­தனர்.

அவர்­களின் கோரிக்­கை­களை ஏற்றுக் கொண்டு போரை நிறுத்­து­வது, வருங்­கால தலை­மு­றை­க­ளுக்கு செய்யும் காட்டிக் கொடுப்­பாக இருக்கும் என்று அவர்­க­ளுக்கு பதிலளித்திருந்தேன்.

2015 ஜனாதிபதி தேர்தலின் போது, என்னை அகற்றுவதில், குறிப்பிட்ட சில வெளிநாட்டு சக்திகளும், உள்நாட்டு சக்திகளும் முக்கிய பங்காற்றியிருந்தன.

அப்போது பாலத்துக்குக் கீழாக அதிகளவு நீர் ஓடிக் கொண்டிருந்தது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post