தாயாரின் உடலோடு பிணைத்த நிலையில் பிஞ்சு குழந்தையின் சடலம்: அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் கிணற்றில் இருந்து இளம் பெண்ணையும் பிஞ்சு குழந்தையையும் சடலமாக மீட்ட சம்பவத்தில் கணவர் உள்ளிட்ட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அரசு ஊழியரான ரிஜு(35), இவரது தாயார் சுசீலா(65) மற்றும் சகோதரி பிந்து(40) ஆகிய மூவருமே பொலிசாரால் கைது செய்யப்பட்டவர்கள்.

ரிஜுவின் மனைவி அஞ்சு(26) மற்றும் 9 மாதம் பிராயமான மகன் மாதவ் ஆகிய இருவருமே கடந்த யூலை மாதம் 28 ஆம் திகதி கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டவர்கள்.

தாயாரின் உடலுடன் பிணைத்த நிலையில் குழந்தையின் சடலம் காணப்பட்டது. இந்த நிலையில் தங்களது உறவினரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி புகார் அளித்ததை அடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

விசாரணையின்போது முரணான தகவல்களை தெரித்ததை அடுத்து அஞ்சுவின் கணவர் மற்றும் அவரது தாயார் உள்ளிட்ட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தமது உறவினரை சித்திரவதைக்கு உட்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post