மனைவியையும், பிள்ளைகளையும் பிரிந்து வாழ்ந்து வந்தவர் சடலமாக மீட்பு!!ஏறாவூரில், கட்டடமொன்றின் வாசல் கதவிற்கு அருகிலிருந்து தொழிலாளியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செங்கலடி 01, கணபதி கிராமத்தை சேர்ந்த கந்தலிங்கம் உதயகுமார் (48 வயது) என்ற குடும்பஸ்தரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் குடும்ப தகராறு காரணமாக மனைவியையும், பிள்ளைகளையும் பிரிந்து தனது தாயுடன் வாழ்ந்து வந்துள்ளதாக தெரியவருகிறது.இந்த நிலையில் உடற்கூறாய்வுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Previous Post Next Post