இரட்டை சகோதரர்கள், கண் பார்வை குறைபாடு காரணமாக தூக்கிட்டு தற்கொலை

குஜராத் மாநிலத்தை சேர்ந்த இரட்டை சகோதரர்கள், கண் பார்வை குறைபாடு காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் பால்கா பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரர்கள் ஆசிப் ஷேக், சித்திக் ஷேக். 25 வயதான இரட்டையர்களுக்கு பிறந்தது முதலே பார்வை குறைபாடு இருந்துள்ளது.

நாளடையவில் வயது முதிர்ச்சி அடையும்போது கண்பார்வை மேலும் குறைவடைந்துள்ளது. இதனால் மனதளவில் பாதிப்படைந்த இரட்டையர்கள் நேற்றைய தினம் வீட்டில் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர்.

இந்த சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் மீது பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து காவல் ஆய்வாளர் Veraval Bharat Koli கூறுகையில், ஆசிப், சித்திக் இருவரும் வீட்டின் மேல் தளத்தில் உள்ள அறையில் தான் உறங்கி வந்துள்ளனர்.கண் பார்வை குறைபாடு காரணாமாக சித்திக் வீட்டிலிருந்து வெளியில் கூட செல்ல தயக்கம் காட்டி வந்துள்ளார். அதேசமயம் ஆசிப் சமீபத்தில் கிடைத்த வேலையை கூட இந்த காரணத்தால் விட்டு வந்துள்ளார்.
இதனால் இருவரும் அதிக மனஉளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

நேற்று காலை அவர்களுடைய மருமகன் நீண்ட நேரமாகியும் மாடியில் சத்தம் கேட்காததால், சந்தேகமடைந்து அறையின் ஜன்னல் வழியே எட்டி பார்த்திருக்கிறான். அப்பொழுது சித்திக் தூக்கில் தொங்கியவாறும், ஆசிப் படுக்கையில் சடலமாகவும் கிடப்பதையும் பார்த்து தான் எங்களுக்கு தகவல் கொடுத்தனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தில் இருவரும் வெவ்வேறு விதமாக இறந்து கிடந்ததால், பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் விரிவான விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post