பெண் விரிவுரையாளரின் மரணத்திற்கு காரணம் என்ன? வெளியாகிய மருத்துவ அறிக்கை


திருகோணமலையில் சடலாமக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளர் நீரில் முழ்கியமையால் ஏற்பட்ட மூச்சுத் திணறலே மரணம் இடம்பெற்றுள்ளமைக்கு காரணம் என கூறப்படுகின்றது.

பிரேத பரிசோதனையின் ஊடாக இந்த விடயம் தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனையானது யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த பெண்ணின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்பதுடன், குறித்த பெண் இரண்டு அல்லது மூன்று மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும், நீரில் முழ்கியமையால் இடம்பெற்ற மூச்சு திணறலினாலே இம் மரணம் சம்பவித்தமை என்பது தெரியவந்துள்ளது.

காணாமல்போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது கணவன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post