விபத்தை ஏற்படுத்திய அம்புலன்ஸ் சாரதியின் மனிதாபிமான மற்ற செயல்….!!

சுன்னாகம் நகரில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாயையும் மகனையும் மோதிவிட்டு அம்புலன்ஸ் சாரதி, மனிதாபிமானற்ற நிலையில் அன்புலன்ஸ் வண்டியை எடுத்துச் சென்றார் என்று விபத்து இடம்பெற்ற இடத்தில் நின்றவர்கள் தெரிவித்தனர்.

அம்புலன்ஸ் வண்டியில் பயணித்த மருத்துவர், தெல்லிப்பழை வைத்தியசாலைக்குக் கடமைக்குச் செல்லவேண்டும் என்று தெரிவித்தே சாரதி அம்புலன்ஸ் வண்டியை எடுத்துச் சென்ற தாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் சுன்னாகம் நகர் கே.கே.எஸ் வீதியில் இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது.

மகனை பாடசாலையில் விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பப் பெண், உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு நின்றவர்களால் முச்சக்கர வண்டியில் ஏற்றி தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

சுன்னாகம் மயிலங்காடுப் பகுதியைச் சேர்ந்த நிக்லஸ் மேரி நிரோஜினி (வயது-32) என்ற பெண் உடல் நிலை பாதிக்கப்பட்டநிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தெல்லிப்பழை வைத்தியசாலையில் கடமையாற்றும் மருத்துவ அதிகாரியை ஏற்றிவந்த அம்புலன்ஸ் வண்டியே விபத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அம்புலன்ஸ் வண்டியில் குடும்பப் பெண்ணை ஏற்றிச் செல்லுமாறு அங்கிருந்தவர்களால் கோரப்பட்டது. எனினும், மருத்துவர் கடமைக்குச் செல்வேண்டும் என்று தெரிவித்து சாரதி அம்புலன்ஸ் வண்டியை எடுத்துச் சென்றுள்ளார்.சாரதியின் மனிதாபிமற்ற செயற்பாடு தொடர்பில் சம்பவ இடத்திலிருந்த பொது மக்கள் விசனம் தெரிவித்தனர்.

Previous Post Next Post